Friday, May 19, 2023

St. Mary's Bulletin Ascension

 St. Mary's Bulletin Ascension







Ascension






 

Ascension/ stmarys/Bulletin





 

Monday, August 15, 2022

அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா

 18 க்கு மேற்பட்ட விழாக்கள், 4 பெருவிழாக்களை கொண்ட நம் அன்னை மரியாள், கத்தோலிக்க திருச்சபையால் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறார்.

பிறசபையினர் கத்தோலிக்கர்கள் மீது காலம் காலமாக சுமத்தும் விமர்சனம் ஓன்று, அன்னை மரியாளை அளவிற்கு அதிகமாக வழிபடுகின்றனர், தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகின்றனர் என்பது. ஆனால் நமக்கு ஒரு தெளிவு உண்டு. நாம் அன்னை மரியாளை வணங்குகிறோம், கொண்டாடுகிறோம் என்பது உண்மை. ஆனால் ஆராதனை, வழிபாடு என்பது கடவுள் ஒருவருக்கே உரியது என்பதுதான். 

மரியாள் வழியாக நாம் இறைவனிடம் வேண்டுகிறோம் என்ற ஒரு அதிகப்படியான  மனதிருப்தியே தவிர அன்னை மரியாளை மையமாக வைத்து வழிபாடுகள், ஆராதனை நடந்தால் அது இறையியல் அறியாமை.

ஏன் மரியாளை கொண்டாடுகிறோம்?

விண்ணேற்பு பெருவிழாவில் அன்னை மரியாளை கொண்டாடுகிறோம். நம் அன்னை தன உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்து செல்லப்பட்டார் என்று புரிந்துகொள்கிறோம்,

மீட்பின் வரலாற்றில் அன்னையின் பங்கு அளப்பெரியது. மீட்பரை தாங்கிய அவருக்கு கத்தோலிக்க திருச்சபை உயர்ந்த இடத்தை வழங்கி என்றும் சிறப்பிக்க ஆசிக்கின்றது. 

விண்ணேற்பு அவருக்கு கிடைத்த பரிசாக நாமும் மகிச்சியடைகிறோம். இறைத்திட்டத்திற்கு  தாழ்ச்சியுடன் கீழ்ப்படிபவர்களுக்கு காத்திருக்கும் வெகுமதியின் ஒரு முன்மாதிரியாக விண்ணேற்பை ஏற்றுக்கொள்கிறோம். இயேசுவுடன் வாழ்வில் கருவறை முதல் கல்லறை வரை நம்பிக்கையுடன் பயணித்தற்காக  இறைவன் அவருக்கு கொடுத்த பெருங்கோடை இந்த விண்ணேற்பு. 

அன்னை மரியாளின் முன்மாதிரி 

அன்னை மரியாளின் வாழ்விலிருந்து ஏராளாமான பண்புநலன்களை நாம் கற்றுக்கொள்ளலாம். நம்பிக்கை, எதிர்நோக்கு, கீழ்ப்படிதல், தூய்மை, பொறுமை, தாழ்ச்சி, பிறர்க்கு உதவும் மனநிலை, அமைதி, மனத்திடம் என்று அடுக்கி கொண்டே போகலாம். என்றாலும், அன்னை மரியாளின் செபவாழ்வு நம் அனைவருக்கும் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

எப்படி செபிப்பது? செபத்தின் வழியாய் அதிசயங்களை நம் வாழ்வில் பெற்றுகொள்வது எங்ஙனம் என்று கானாவூர் மன விழாவிலே நமக்கு புரியவைக்கிறார், அன்னை மரியாள். இரசம் தீர்ந்துவிட்டது, அவர் சொல்வது போல் செய்யுங்கள் ...இந்த இரண்டு சொற்றொடர்கள்  வழியாய் செபிப்பது எப்படி என்று வாழ்ந்து காட்டுகிறார். 

செபம் என்பது, வார்த்தை விளையாட்டு அல்ல, உணர்வுகளை கட்டவிழ்த்து விடும் இடமும் அல்ல. மளிகை பட்டியல் போல் நீண்டு  போகும் விண்ணப்ப கோர்வையும் அல்ல. புகழ்ச்சி, மன்னிப்பு, வேண்டுதல் என்று ஒரு கட்டமைப்பிற்குள்  அடங்கும் மந்திரம் அல்ல. 

செபம் என்பது நம் சூழ்நிலையை ஆண்டவரிடம் எடுத்து சொல்லும் தருணம். உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டு அகன்றுவிடும் புத்திசாலித்தனம்.  அடிப்படை என்ன? அவர் சொல்வது போல் செய்யுங்கள், உம்  சித்தபடியே எனக்கு ஆகட்டும். இவை மரியாள்  நமக்கு வாழ்ந்து காட்டிய முன்மாதிரிகை.

நம் நிலையை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, அவரின் திட்டத்திற்கு அடிபணிவது சிறந்த  செபம் மட்டுமல்ல, நல்ல  ஆன்மீகத்திற்கான அடித்தளம். 

அன்னையை பின்பற்றுவோம். செபத்தில் வளர்வோம். ஆன்மீகத்தில் மலர்வோம்.  

Sunday, August 14, 2022

Reflection on the Solemnity of the Assumption of Blessed Virgin Mary

 In the summer month of August we hold two important feasts.

On August 6 we celebrate the Transfiguration of the Lord, where Jesus showed our own inner nature to the apostles.

Today we celebrate the Assumption of Mary, through which God shows us the completion of our lives. Through this He gives us great hope and encouragement.

After the Annunciation of the Lord, the enthusiastic apostles wanted to stay and build houses.

To them Jesus said that he must first go the way of the cross to reach the resurrection. So he said that the Son of Man did not come to be served, but to serve, and to give his life as a ransom for many.... so that they may have life and have it in abundance. Therefore, he gathered around him the people who lacked the fullness of life and announced to them that the kingdom of God was among them. Serving these needy people was for him the fulfillment of God's will.

We experience the same in the life of Mary. Mary said: My soul praises the greatness of the Lord and my spirit rejoices over God, my Savior....because he gives his gifts to the hungry and leaves the rich empty-handed.

From the moment she was filled with the Holy Spirit, she looked after the needy and the distressed. Mary's task, which she received through the Holy Spirit, was not only to give birth to a child, but also to carry out His will in her own life. Thus, she hastened to alleviate the sorrows of Elizabeth and also the sorrows of the wedding party of Cana. These helps were only examples of Mary's life.

She is always ready to bring our worries before God and to ask Him for the right solution. Because she fulfilled God's will in her life, she was taken body and soul to heaven. And so, when we come to church today, God does not expect us to bring something for Him, but to be ready to serve our fellow man according to His will. In this way we gain our one way ticket to heaven, to God.

by- Rev. Jeremias George 

Saturday, August 13, 2022

பேரருட்தந்தை ஜெரேமியாஸ் ஜார்ஜ் அவர்களின் மறையுரை சிந்தனை ( ஆண்டின் பொதுக்காலம் 20-ம் ஞாயிறு )

 அன்பு நண்பர்களே,

இந்த நாட்களிலே ஏராளமான பேர் திருச்சபையை விட்டு வெளியேறுவதையும், ஆலயத்திற்கு வருவோர் மிக குறைவான எண்ணிக்கையில்  இருப்பதையும் பார்க்கும் போதும் நம் மனதில் எழும் ஒரு கேள்வி ‘ இறைவனின் திருச்சபை எங்கே?’

அடுத்த கேள்வி, இயேசு கிறிஸ்து ஒரு மதத்தை உருவாக்க வந்தாரா அல்லது, தீயை மூட்டவே வந்தேன் என்று  முழங்கிய இயேசுவின் இறையாட்சியின் அர்த்தம் என்ன? 

கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.( பிலி 2:6-8)

இந்த இயேசு, காணாமல் போன ஆடுகளை தேடி சென்றார். தன்  சீடர்களை மீனவர்களிலிருந்தும், வரி வசூலிப்பவர்களிலிருந்தும் தேர்ந்து கொண்டார். சமூகம் பாவிகள் என்று முத்திரையிட்டு புறம்தள்ளியவர்களோடு உணவு அருந்தி உறவாடினார். 

ஒடுக்கப்பட்டவர்கள் மீண்டும் சமூகத்திற்குள் சேர்க்கப்படவேண்டும் என்று கேட்டார். கடவுளின் கருணை ஏழைகளுக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் காணக்கிடைக்க வந்தார். இவ்வாறு, வாழ்வு, அதுவும் நிறைவாழ்வு நமக்கு அளவற்று கிடைக்க செய்தார். 

இந்த குறிக்கோளுக்காக, தீயை மூட்ட வந்தார். எனவேதான், அவர் செல்வந்தரையும், தன்னல மிக்கவரையும் கடிந்து கொண்டார். ஏழைகளிடமும், அயலானிடமும் இறைவனை உய்த்துணர கற்றுத்தந்தார். 


Thursday, August 11, 2022

முட்டாள் தனமான பேச்சு

 முட்டாள் தனமான பேச்சு 

பல நேரங்களில் நம் உறவினர் மற்றும் நண்பர்கள் பேசுவதை நாம் மிக உன்னிப்பாக கவனிப்பதில்லை. கூர்ந்து கேட்பதை கடந்து கவனமாக புரிந்து கொண்டால் அவர்கள் பேசுவதில் உள்ள அபத்தங்கள் நமக்கு தெரிய வரும்.

இந்த உலகில் எல்லாமே எனக்கு தெரிந்த விஷயம் தான் என்று பேசும் பலர் உண்டு. எந்த கற்றலும் இல்லாமல், எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல் அளந்து விடும் நபர்களும் உண்டு. வாயை திறந்தாலே முட்டாள் தனமான கருத்துகளை மட்டும் பேசும் 'மாமனிதர்களும்' உண்டு.

இந்த சங்கடமான சூழல் மற்றும் சூழலில் மாட்டிய வாய்ப்பு கிடைத்தால் ஒன்றே ஓன்று செய்யலாம். முன்னிருக்கும் முட்டாளை ஆமோதித்து பாராட்டிவிட்டு நகர்ந்து விடுங்கள். ஒரு போதும் விவாதம் செய்யாதீர்கள்.

இப்படிப்பட்ட மனிதர்களோடு காரசாரமாக விவாதத்தில் ஈடுப்படீர்கள் என்றால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு குழப்பம் வரும், இந்த இரண்டு முட்டாள்களில் உயர்ந்த முட்டாள் யார்?

முட்டாள்கள் பேசும்போது அவர்கள் தங்கள் அறிவீனத்தை அறிமுகம் செய்து விளம்பரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்து ரசிப்பதுதான் புத்திசாலித்தனம் . 

கினோ 

11/08/2022